தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை படிப்படியாக வழங்கப்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை படிப்படியாக வழங்கப்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 17 May 2020 5:40 AM IST (Updated: 17 May 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை படிப் படியாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மேல்-சபை ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதி எம்.எல்.சி.க்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், கல்வித்துறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் பேசிய எம்.எல்.சி.க்கள், கர்நாடகத்தில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை உடனே விடுவிக்க வேண்டும். 

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கும் உதவி தொகுப்பை அறிவிக்க வேண்டும். இந்த தனியார் பள்ளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

“தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும்படி உத்தரவிடப்படும். ஏழை ஆசிரியர்களுக்கு உணவு தானியங்கள் வழங்க உத்தரவிடப்படும். மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story