திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்தது.
திருவண்ணாமலை,
கொரோனா வைரஸ் தாக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதில் பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்களால் தான் அதிகமாக ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 140 ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சேத்துப்பட்டு அருகே திருமலை கிராமத்தை சேர்ந்த ஒருவர், கலசபாக்கம் அருகில் உள்ள மேலாரணி பகுதியை சேர்ந்த ஒருவர், வந்தவாசியை சேர்ந்த ஒருவர், செய்யாறு அருகே பெருங்கட்டூர் அடுத்த வெங்களத்தூர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, வந்தவாசி அருகே கீழ்கொடுங்களூரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், செய்யாறை சேர்ந்த ஒருவர், வேட்டவலம் அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் ஆகியோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story