சத்தியமங்கலத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி குடை பிடித்தபடி ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்தில் மதுக்கடைகளை மூடக் கோரி குடை களை பிடித் தபடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்தியமங்கலம்,
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 7, 8 ஆகிய 2 நாட்கள் மதுக்கடைகள் திறந்து விற்பனை நடந்தது. ஆனால் மதுக்கடைகளில் நிபந்தனைகளை மீறி மது விற்கப்படுவதால் கொரோனா தொற்று ஏற்படக்கூடும். எனவே மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் கோர்ட்டு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் மது கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது.
குடையை பிடித்தபடி ஆர்ப்பாட்டம்
மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி. பி.ஐ. கட்சியினர் நேற்று காலை 10 மணி அளவில் சத்தியமங் கலத்தில் பெரிய பள்ளிவாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி .பி.ஐ. தலைவர் சிக்கந்தர்பாட்சா தலைமை தாங்கினார்.
இதில் எஸ்.டி.பி.ஐ. செயலா ளர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் குடைகளை பிடித்திருந்தனர். இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள பாத்திமா நகரிலும் எஸ்.டி. பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story