முதுகுளத்தூர் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறு மூதாட்டி கொலையில் முடிந்தது - வாலிபர் கைது
குடிபோதையில் ஏற்பட்ட மூதாட்டி கொலையில் முடிந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா இளம்செம்பூர் பகுதியில் கோகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவருடைய மனைவி காளியம்மாள்(வயது 72). இவருடைய மகள் வழி பேத்தி சத்யாவுக்கும் (28) அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வந்த கார்த்திக், தனது மனைவி சத்யாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதை அவரது பாட்டி காளியம்மாள் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், அருகில் கிடந்த கம்பை எடுத்து மூதாட்டியை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து சத்யா போலீசில் புகார் அளித்தார். முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் உத்தரவின் பேரில் இளம்செம்பூர் இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
Related Tags :
Next Story