கோபி போலீஸ் நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க. புகார்
கோபி போலீஸ் நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கோபி பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது.
நடவடிக்கை
விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் கோபி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story