பொதுமக்கள் வருகை குறைந்ததால் வெறிச்சோடி காணப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம்


பொதுமக்கள் வருகை குறைந்ததால் வெறிச்சோடி காணப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம்
x
தினத்தந்தி 17 May 2020 10:12 AM IST (Updated: 17 May 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் வருகை குறைந்ததால் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கரூர்,

பொதுமக்கள் வருகை குறைந்ததால் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலகம்

கரூர் தாந்தோணிமலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுனர் உரிமம் பெறவும், அதனை புதுப்பிக்கவும், தகுதிச்சான்று பெறவும் என பல்வேறு காரணங்களுக்காக தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் அந்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளதால், வட்டார போக்குவரத்து அலுவலகம் மீண்டும் இயங்கி வருகிறது.

ஏற்கனவே இந்த அலுவலக பணிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படும் நிலையில், தற்போது இணையதளம், செல்போன் செயலி மூலமும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வெறிச்சோடி காணப்படுகிறது

இதனால் பொதுமக்கள் வருகை குறைந்ததால் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கூறுகையில், தினமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் எல்.எல்.ஆர். எடுக்கவும் , 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெறவும், 100 புதிய வாகனங்களுக்கு பதிவு எண் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள். தற்போது ஊரடங்கு தளர்வால் பணிகள் தொடங்கிய நிலையில், இந்த அலுவலகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவற்றை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் குறைந்த அளவிலான மக்களே அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். புதிய வாகன பதிவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது, என்று கூறினர்.

Next Story