கொரோனா ஊரடங்கால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிக்கல்


கொரோனா ஊரடங்கால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிக்கல்
x
தினத்தந்தி 17 May 2020 10:53 AM IST (Updated: 17 May 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கீரமங்கலம், 

கொரோனா ஊரடங்கால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த சில வருடங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால் அரசு பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் மீண்டும் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தி பள்ளிகளை தொடர்ந்து செயல்படுத்த நினைத்த அந்தந்த கிராம இளைஞர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இணைந்து பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை கல்விச்சீராக கொடுத்து வீட்டுக்கு வீடு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி வயது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். அதனால் ஏராளமான அரசு பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஊரடங்கால்...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் இணைந்து ஆசிரியர்களுடன் வீட்டுக்கு வீடு சென்று அரசு பள்ளிகளில் உள்ள சிறப்புகளை கூறி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்து வந்தனர்.

தற்போது மே மாதம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காலம். ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கீரமங்கலம் பகுதி இளைஞர்கள் கூறுகையில், கடந்த சில வருடங்களாக கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, சேந்தன்குடி, பனங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் மாணவர்கள் சேர்க்கைக்காக வீட்டுக்கு வீடு சென்று அரசு பள்ளிகளின் சிறப்புகளை சொல்லி மாணவர்களை சேர்த்தோம். ஆனால் இந்த வருடம் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் மாணவர்கள் சேர்க்க முடியவில்லை. இருந்தாலும் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்துவோம் என்றனர்.

Next Story