தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடியது


தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 18 May 2020 4:15 AM IST (Updated: 18 May 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத் தில் டாஸ்மாக் கடைகள் நேற்று வெறிச்சோடி கிடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அன்று ஒரேநாளில் ரூ.5 கோடியே 60 லட்சத்துக்கு மதுபானம் விற்பனையானது.

பின்னர் சில நாட்களில் ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டன. இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

வெறிச்சோடியது

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மதுப்பிரியர் கள் அவ்வப்போது வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

பெரும்பாலான கடைகளில் மது வாங்குவதற்கு எந்தவித கூட்டமும் இல்லை. மக்கள் நீண்ட நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருப்பதால் பணப்புழக்கம் குறைந்து உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story