கொரோனா பாதித்த பகுதிகளில் போலீஸ் கமிஷனர் நேரடி ஆய்வு - சென்னை போலீசில் மேலும் 12 பேர் பாதிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
சென்னை,
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை போலீசிலும் 3 உயர் அதிகாரிகள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் தாக்கப்பட்டு அல்லல் படுகிறார்கள்.
நேற்று கொரோனாவினால் சென்னை போலீசில் 12 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களில் 4 பேர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆவார்கள். பாதிப்படைந்த உயர் அதிகாரிகளும், போலீசாரும் மருத்துவமனைகளிலும், தனிமைப்படுத்தபட்ட பகுதிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று கொரோனா பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க உரிய ஆலோசனைகள் வழங்கினார்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, தண்டையார்பேட்டை நேதாஜிநகர் பகுதி, மாதவரம் வெள்ளிவாயில் சோதனை சாவடி, செங்குன்றம் முண்டியம்மாள் நகர் சோதனை சாவடி, மாதவரம் பழமார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story