அரசின் நிபந்தனைகளை வியாபாரிகள் பின்பற்றவேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


அரசின் நிபந்தனைகளை வியாபாரிகள் பின்பற்றவேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x

அரசின் நிபந்தனைகளை அரியாங்குப்பம் பகுதி வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 40 நாட்களுக்கு பிறகு அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து அரசின் உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து மார்க்கெட் ரோடு வியாபாரிகளுடன் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சமூக இடைவெளி

வியாபாரிகளும், பொதுமக்களும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கை கழுவும் திரவத்தை ஒவ்வொரு கடைகளும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அரசின் நிபந்தனைகளை கடைபிடிக்கவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார். இதை பின்பற்றுவதாக வியாபாரிகள் உறுதி அளித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், ராஜன், அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகி ராமபுத்திரன் மற்றும் நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story