மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது மின்தடையால் பொதுமக்கள் அவதி + "||" + The torrential downpour of rain has cooled Erode, causing the civilian casualties

சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது மின்தடையால் பொதுமக்கள் அவதி

சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது மின்தடையால் பொதுமக்கள் அவதி
சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது. ஆனால் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு,

கோடை காலத்தின் தொடக்கத்தில் இருந்தே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் நடப்பதால் வெயிலின் உஷ்ணமும் அதிகமாக காணப்படுகிறது.


ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இந்தநிலையில் ஊரடங்கின் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கைக்கு ஈரோடு திரும்பி வருகிறது. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தொடங்கி இருப்பதால் வெயிலின் கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

சூறாவளி

நேற்று பகலிலும் வழக்கத்தை போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. ஈரோட்டில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் அடித்தது. இந்தநிலையில் இரவு 7 மணிஅளவில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பொழிய தொடங்கியது. சுமார் அரை மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் தணிந்து ஈரோடு குளிர்ந்தது. மழை பெய்ததால் வீரப்பன்சத்திரம், சூளை, கருங்கல்பாளையம், பிரப்ரோடு, ஆர்.கே.வி.ரோடு, பெருந்துறை ரோடு, கொல்லம்பாளையம், சூரம்பட்டி வலசு உள்ளிட்ட பகுதிகளின் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. சூறாவளி காற்று வீசியதுடன் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஈரோடு மாநகரமே இருள் சூழ்ந்ததைபோல மாறியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

கொடுமுடி- அந்தியூர்

இதேபோல் கொடுமுடியில் நேற்று இரவு 7.45 மணி அளவில் சூறாவளிக்காற்று வீச தொடங்கியது. பின்னர் 8 மணியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 8.30 மணி வரை நீடித்தது. ஊஞ்சலூர், தாமரைபாளையம், கொளாநல்லி, பாசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7.45 மணி முதல் 8.15 மணி வரை சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அந்தியூரை அடுத்த கெட்டி சமுத்திரம் பகுதியில் 8 மணி முதல் 8.30 மணி பலத்த மழை பெய்தது.

இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்
தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை சாலையோரத்தில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
2. சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க பொதுமக்கள் எதிர்ப்பு
சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
3. அரவக்குறிச்சி நகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அரவக்குறிச்சி நகரப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. ரெயில்வே கேட் மூடல்: நீடாமங்கலத்தில், 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் அவதி
ரெயில்வே கேட் மூடப்பட்டதால் நீடாமங்கலத்தில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
5. தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம்பயணிகள் கடும் அவதி
திருச்சியில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு நேரடியாக இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.