நாட்டறம்பள்ளி அருகே, காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - குடிநீர் வழங்காததை கண்டித்து நடந்தது


நாட்டறம்பள்ளி அருகே, காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - குடிநீர் வழங்காததை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 18 May 2020 3:30 AM IST (Updated: 18 May 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன், பம்புசெட் அறையை முறுகையிட்டு, காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் கிராமத்தின் ஏரிப்பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால், ஆழ்துளை கிணறு ஒப்பந்ததாரர் மூலம் பழுது பார்க்கப்பட்டது. ஆனால் புதிய மின்மோட்டாரை பொருத்தவில்லை என தெரிகிறது. அதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் முறையிட்டனவ். அப்போது ஒப்பந்ததாரர்தான் மோட்டாரை பொருத்தவேண்டும் என்றுகூறி காலம்கடத்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று ஆழ்துளை கிணறு பம்புசெட் அறை அமைந்துள்ள பகுதிக்கு சென்றனர்.

அங்கு பம்புசெட் அறையை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சரிசெய்யப்பட்ட ஆழ்துளை கிணற்றில், புதிய மின்மோட்டாரை பொருத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story