மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். + "||" + The public was involved in a roadblock demanding the removal of the tasmac

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி, 

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் கடந்தசில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா நெற்குணம் மதுரா வயலாமூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

பொதுமக்களுக்கும், விவசாயத்துக்கும் இடையூறாக இருந்த அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நெற்குணம் ஊராட்சி சார்பாக கடந்த ஒரு ஆண்டாக பலமுறை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டும், அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படாமல் உள்ளது.

நெற்குணம் ஊராட்சி மன்ற தலைவர் எமராஜ் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் முனியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட நெற்குணம் மற்றும் வயலாமூர் கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 125 பேர் நேற்று காலை 10 மணியளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அருகே வந்து, சிறிது தூரத்தில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் (பொறுப்பு) கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு, தெள்ளார் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சாலை மறியலை கைவிடவில்லை. டாஸ்மாக் கடையை அகற்றினால் தான் செல்வோம் என அனைவரும் கூறினர்.

அதைத்தொடர்ந்து தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, வருகிற 31-ந்தேதி வரை டாஸ்மாக் கடை மூடப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் மதியம் 12 மணி வரை நீடித்தது.

பின்னர் பொதுமக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கே.ஆர்.நரேந்திரனிடம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஊராட்சி மன்றம் சார்பில் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்டு, இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தாசில்தார் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிக விலைக்கு மது விற்ற9,319 ஊழியர்கள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டில் ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் தகவல்
அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு 9,319 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2. டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
3. ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக மது விற்பனை அமோகம்
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று 2-வது நாளாக மது விற்பனை அமோகமாக நடந்தது.
4. டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: குடையுடன் வரிசையில் நின்று மதுபானம் வாங்கினர்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடையுடன் வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்கினர்.
5. டாஸ்மாக் கடைகள் திறப்பு: குடையை பிடித்தபடி மது வாங்கி சென்ற குடிமகன்கள்
டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் குடையை பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மது வாங்கி சென்றார்கள்.