வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலியை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூர் பூங்கா இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக அளவு விலங்கு மற்றும் விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக திகழ்கிறது.
இப்பூங்காவில் பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80 (G) -க்கான ரசீது, இலவச பூங்கா வசதிகள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படும். மக்களின் வசதிக்காக இந்த சேவை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். http://www/aazp/in/an-i-m-a-l-a-d-o-pt-i-on/ என்ற இணைய முகவரியில் விலங்கு தத்தெடுப்பு பற்றிய அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் தத்தெடுப்பு தொகையை செலுத்தவும் முடியும். நேற்று தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்னும் வெள்ளை புலியை மேலும் 4 மாதங்களுக்கு மே 2020 முதல் தத்தெடுத்து உள்ளார்.
இவர் ஏற்கனவே 2018-ம் ஆண்டு முதல் இந்த புலியை தத்தெடுத்துள்ளார். இந்த புலி வண்டலூர் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித் துள்ளது.
Related Tags :
Next Story