புளியங்குடியில் கடைகள் திறப்பு


புளியங்குடியில் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 19 May 2020 3:45 AM IST (Updated: 19 May 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் கடைகள் திறக்கப்பட்டன.

புளியங்குடி,

புளியங்குடியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி கடைகளை திறக்க அனுமதி வேண்டி புளியங்குடி வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதனை தொடர்ந்து அதிகாரிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. 

தொற்று பாதிக்கப்பட்ட வார்டு எண் 1, 9, 14, 19, 21 ஆகிய 5 வார்டுகள் தவிர இதர இடங்களில் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று காய்கறி கடை, பலசரக்கு கடை, அரிசி கடை, திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன. வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த மற்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வெளியே வந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். 

இதனால் புளியங்குடி நீண்ட நாட்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது.


Next Story