அதீத நம்பிக்கையே எனக்கு கொரோனா ஏற்பட காரணம் - ஜிதேந்திர அவாத் சொல்கிறார்
அதீத நம்பிக்கையே எனக்கு கொரோனா ஏற்பட காரணம் என ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநில வீட்டு வசதி துறை மந்திரியாக இருப்பவர் ஜிதேந்திர அவாத். இவரது பாதுகாவலா்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 13-ந் தேதி ஜிதேந்திர அவாத் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதையடுத்து நடந்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 10-ந் தேதி நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.
அதீத நம்பிக்கை
நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது குறித்து ஜிதேந்திர அவாத் கூறும்போது, ‘‘என்னிடம் இருந்த அதீத நம்பிக்கையே எனக்கு கொரோனா ஏற்பட காரணம். ஏப்ரல் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை எனது வாழ்வில் மிக முக்கியமான தருணம். நான் உயிர் பிழைக்க வாய்ப்பு மிக குறைவாக உள்ளதாக எனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனது வாழ்க்கையை நிைனத்து மிகவும் பயந்தேன்.
ஒவ்வொரு நிமிடமும் வாழ்வையும், சாவையும் பற்றியே நினைத்து கொண்டு இருந்தேன். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் சொத்துகளை மகளுக்கு கொடுக்குமாறு எழுதி வைத்தேன்.
எனது வாழ்க்கை முறை மற்றும் உடல்நலனில் நான் எவ்வளவு பொறுப்பு இல்லாமல் இருந்து கொண்டேன் என்பதை இந்த தொற்று உணர்த்தி உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்க்கை இருக்கிறது என்பதை நான் முற்றிலுமாக மறந்துவிட்டேன்’’ என்றார்.
Related Tags :
Next Story