‘எங்களை கொலை செய்வதற்கு முன்பு நாங்கள் முந்திக் கொண்டோம்’ கார் டிரைவர் கொலையில் கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்
‘எங்களை கொலை செய்வதற்கு முன்பு நாங்கள் முந்திக் கொண்டோம்’ என ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திருச்சி,
‘எங்களை கொலை செய்வதற்கு முன்பு நாங்கள் முந்திக் கொண்டோம்’ என ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
டிரைவர் கொலை
திருச்சி திருவானைக்காவல் நரியன்தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 21). வாடகை கார் டிரைவரான இவரை சம்பவத்தன்று இரவு 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்கி, கோகுல், உதயகுமார், மாரி ஆகிய 4 பேரும் சேர்ந்து மதுபோதையில் விக்னேசை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கைதான 4 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முந்திக் கொண்டோம்
சம்பவத்தன்று மதியம் ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு தகராறு நடந்துள்ளது. இந்த தகராறில் ஒருவருக்கு ஆதரவாக விக்னேஷ் சென்றுள்ளார். இதில் ஏற்பட்ட விரோதத்தில் கோகுல், விக்கி உள்பட 4 பேர் மீதும் விக்னேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனால், எந்த நேரமும் விக்னேஷ் தங்களை பழி தீர்ப்பார் என 4 பேரும் நினைத்துள்ளனர். அதனால் எங்களை கொலை செய்வதற்கு முன்பு நாங்கள் முந்திக் கொண்டு அவரை கொன்று விட்டோம் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே சந்துரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் இதேபோன்ற வாக்குமூலத்தை தான் கொடுத்தனர். சந்துரு தங்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், அதற்கு முன்னதாக தாங்கள் முந்திக்கொண்டு அவரை தீர்த்து கட்டியதாகவும் கூறி இருந்தனர். தற்போது இந்த கொலை வழக்கிலும் இதேபோல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Related Tags :
Next Story