திருப்பரங்குன்றத்தில் 1,200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்


திருப்பரங்குன்றத்தில்  1,200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி  ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 19 May 2020 8:26 AM IST (Updated: 19 May 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கையொட்டி திருப்பரங்குன்றத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பரங்குன்றம், 

ஊரடங்கையொட்டி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் கீழத்தெரு, நடுச்சந்து, வெள்ளிமலை சந்து, ராஜீவ்காந்தி நகர், பெரியரத வீதி, கீழரத வீதி, படப்படிதெரு, ஆதிதிராவிட காலனி ஆகிய பகுதியில் உள்ள 1,200 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பு பைகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் அவைத்தலைவர் ராஜு, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி பகுதி செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், வட்டச்செயலாளர் பொன்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறும்போது, திருப்பரங்குன்றம் மற்றும் வடக்கு தொகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் வருகிற 31-ந் தேதி வரை 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும். திருப்பதியில் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதுபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார். மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதை சமூக இடைவெளியுடன் பயன்படுத்தி கொரோனாவை விரட்டிட மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

Next Story