அரசு வங்கிகளில் கொரோனா நிவாரண நிதி கணக்கு தொடங்குவோரிடம் விரிவான விசாரணை வங்கி தலைமையகம் உத்தரவு


அரசு வங்கிகளில்  கொரோனா நிவாரண நிதி கணக்கு தொடங்குவோரிடம் விரிவான விசாரணை  வங்கி தலைமையகம் உத்தரவு
x
தினத்தந்தி 19 May 2020 4:02 AM (Updated: 19 May 2020 4:02 AM)
t-max-icont-min-icon

மோசடி செய்வோர், அரசு வங்கிகளில் கொரோனா நிவாரண நிதி தொடங்க வாய்ப்புள்ளதால் கிளை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் விரிவான ஆய்வுக்கு பின்னர் கணக்கு தொடங்க அனுமதிக்க வேண்டும் என வங்கி தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர், 

அரசு வங்கி கிளைகளுக்கு தலைமையகம் அனுப்பியுள்ள உத்தரவுகளில் கூறியுள்ளதாவது:-

நிவாரண நிதி கணக்கு

மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குற்ற செயல்கள் குறைந்துள்ளன. இந்த நிலையில் வங்கிகளில் கொரோனா கோவிட் நிவாரண நிதி கணக்கு என பலர் தொடங்கி பொதுமக்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. ஊரடங்கு அறிவித்த பின்னர் பலர் அரசு வங்கி கிளைகளில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணை

எனவே வங்கி கிளை அதிகாரிகள் இம்மாதிரியான கணக்கு தொடங்க விண்ணப்பிப்பவர்கள் குறித்து கே.ஒய்.சி. திட்டத்தின் கீழ் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணைக்கு பின்பு தான் குறிப்பிட்ட நபர் குறித்த விவரங்கள் திருப்தி அளிக்கும் நிலையில் இருந்தால் மட்டுமே கணக்கு தொடங்க அனுமதிக்க வேண்டும். சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் கணக்கு தொடங்க அனுமதிக்கக்கூடாது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை இம்மாதிரியான கணக்கு தொடங்க விண்ணப்பித்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும். விசாரணை விவரங்களை தலைமையகத்துக்கு தெரிவித்து அனுமதி பெற்ற பின்னரே கணக்கு தொடங்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story