மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்


மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 19 May 2020 9:41 AM IST (Updated: 19 May 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில், மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கரூர், 

கரூர் மாவட்டத்தில், மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸ்

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர், காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் ஏப்ரல் மாதம் முடிவில், மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை இருந்தது.

இந்தநிலையில் கடந்த (மே) 1-ந்தேதி சென்னையில் இருந்து கரூர் வந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என மொத்தம் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மராட்டிய மாநிலத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு வந்த ஒரு பெண் உள்பட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34 ஆக உயர்வு

இந்நிலையில் நேற்றும் மராட்டியத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு வந்த ஒரு பெண் உள்பட 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் கரூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சிகிச்கை பெறுபவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் முடிவுகள் இன்று வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

Next Story