ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க சமூக விலகலை மறந்து வரிசையில் நின்ற கிராமத்தினர்
சேத்தூர் அருகே ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க அப்பகுதி மக்கள் சமூக விலகலை மறந்து வரிசையில் முண்டியடித்துக் கொண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது மண்எண்ணெயை வாங்க அப்பகுதி மக்கள் வரிசையில் முண்டியடித்துக் கொண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மண்எண்ணெய் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்க அறிவுறுத்தினர். இதையடுத்து மண்எண்ணெய் வினியோகம் சீராக நடைபெற்றது. கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story