கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை முதியவர் ‘டிஸ்சார்ஜ்’ இதுவரை 4 பேர் குணமடைந்தனர்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை முதியவர் ‘டிஸ்சார்ஜ்’ இதுவரை 4 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 19 May 2020 10:51 AM IST (Updated: 19 May 2020 10:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை முதியவர் ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். இதுவரை 4 பேர் குண மடைந்தனர்.

புதுக்கோட்டை, 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை முதியவர் ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். இதுவரை 4 பேர் குண மடைந்தனர்.

கொரோனா சிகிச்சை

சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளியான புதுக்கோட்டை லட்சுமிநகரை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சைக்கு பின் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். அவர் புதுக்கோட்டையில் லட்சுமிநகரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார். அவர் ஒரு வார காலம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 பேர் குணமடைந்தனர்

புதுக்கோட்டையில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதில் சிகிச்சையில் இருந்த மிரட்டுநிலை வாலிபர் கடந்த 6-ந் தேதியும், திருமயத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 13-ந் தேதியும், விராலிமலையை சேர்ந்த 32 வயது வாலிபர் கடந்த 14-ந் தேதியும் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று லட்சுமிநகர் முதியவரும் வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. மீதமுள்ள 3 பேர் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

சண்முகா நகர், மறைமலைநகர் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட போலீஸ் தடுப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டன. இந்த நிலையில் முதியவர் வீடு திரும்பியதால் லட்சுமி நகரில் உள்ள தடுப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story