ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 May 2020 5:46 AM GMT (Updated: 19 May 2020 5:46 AM GMT)

காரைக்குடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

சிவகங்கை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை அந்தந்த ரேஷன்கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையில்லா பொருட்கள் பயனாளிகளுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்றும், இதில் முறைகேடுகள் ஏதும் உள்ளதா என்பதை கண்டறிவதற்கு சிவகங்கை மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தலைமையில் பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் ராமமூர்த்தி, சிவகங்கை சரக துணை பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் துணை பதிவாளர் திருமாவளவன், கூட்டுறவு சார்பதிவாளர் செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் காரைக்குடி பகுதியில் உள்ள 30 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது, அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவாக உள்ள கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 713 அபராதம் விதிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story