200 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு - ஜி.சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்
200 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஜி.சம்பத் எம்.எல்.ஏ. அரிசி, மளிகைப் பொருட்கள் தொகுப்பை வழங்கினார்.
சோளிங்கர்,
ராணிப்பேட்டை மாவட்டம் பரவத்தூர், வடக்கு பரவத்தூர், தெற்கு பரவத்தூர், தற்காஸ் காலனி, புதிய தற்காஸ் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 200 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் தலைமை தாங்கி, 200 ஏழை எளிய குடும்பங்களுக்கு மேற்கண்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, சுரேஷ்சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய அ.தி.முக. செயலாளர் ஜி.பழனி, ஒன்றிய துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி கழக செயலாளர் நரசிம்மரெட்டி, தயாளன், கிளை செயலாளர் ஏழுமலை மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story