அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது 31-ந் தேதி வரை நீட்டிப்பு வைத்திலிங்கம் எம்.பி. அறிவிப்பு


அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது 31-ந் தேதி வரை நீட்டிப்பு வைத்திலிங்கம் எம்.பி. அறிவிப்பு
x
தினத்தந்தி 20 May 2020 4:26 AM IST (Updated: 20 May 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர், 

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் பசியினை போக்குவதற்கு ஏதுவாக தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

31-ந் தேதி வரை நீட்டிப்பு

இந்த நிலையில் தஞ்சை திலகர் திடல் அருகே உள்ள அம்மா உணவகம் மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றில் மக்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் விலையில்லா உணவு வழங்குவது வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story