நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி சடையம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நத்தம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
செந்துறை,
நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி சடையம்பட்டியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் போராட்டம் நடத்த சென்றுள்ளார். அப்போது அவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையொட்டி அவரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் சிறுகுடி-நத்தம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மறியலை கைவிட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story