விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது


விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 20 May 2020 6:07 AM IST (Updated: 20 May 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குத்தாலம், 

விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

கொரோனா கால நிவாரணமாக விவசாய தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாய கடன்களை முழுவதுமாக ரத்து செய்து, புதிதாக விவசாய கடன்களை வழங்க வேண்டும்.

மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ஏழைகளுக்கும் நிதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் இடும்பையன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர் ஷேக்இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர செயலாளர் மனோன்ராஜ், நிர்வாகிகள் சரவணன், செந்தில்குமார், கணேசன் உள்ளிட்ட கட்சியினர் சமூக விலகலை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

திருமருகல் அருகே சீயாத்தமங்கையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதேபோல் திருமருகல், அம்பல், எரவாஞ்சேரி, கோட்டூர், நரிமணம் உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகூரில் 14 பேர் கைது

நாகூர் புதிய பஸ்நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிறுபான்மை குழு துணை தலைவர் தமிம்அன்சாரி, மாவட்ட குழு உறுப்பினர் காதர்ஒலி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை நாகூர் போலீசார் கைது செய்தனர்.

வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். இதேபோல் ஆயக்காரன்புலம், தகட்டூர், தென்னடார், தாணிக்கோட்டகம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சியில் கட்சியின் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story