கடைமடைவரை காவிரி நீர் சென்றடைய குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் முத்தரசன் பேட்டி


கடைமடைவரை காவிரி நீர் சென்றடைய குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 20 May 2020 6:41 AM IST (Updated: 20 May 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

கடைமடைவரை காவிரி நீர் சென்றடைய குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று, முத்தரசன் கூறினார்.

நாகப்பட்டினம், 

கடைமடைவரை காவிரி நீர் சென்றடைய குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று, முத்தரசன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து தவிக்கும் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து பணிகளை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குடிமராமத்து பணி

கொரோனா தொற்று பரவாமல் இருக்க 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் ரூ.20 லட்சம் கோடிக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் சிறு, குறு தொழிலாளர்களுக்கு பயன் தரும் அறிவிப்புகள் இல்லை. டாஸ்மாக் கடையை திறந்துள்ள தமிழக அரசு தற்போது விற்பனை நேரத்தை அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட உள்ள தண்ணீர் கடைமடை பகுதியை சென்று அடையுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. குடிமராமத்து பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை முறையாக பயன்படுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story