வையம்பட்டி அருகே அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகும் அவலம் விவசாயிகள் வேதனை
வையம்பட்டி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வையம்பட்டி,
வையம்பட்டி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அறுவடைக்கு தயார்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையிலும் கூட இருக்கும் குறைந்தபட்ச நீரை வைத்து தான் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி இருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வையம்பட்டியை அடுத்த மண்பத்தை, பாம்பாட்டிப்பட்டி, முகவனூர் ஆகிய பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நெல் வயல்களில் மழை நீர் தேங்கியது.
நெற்கதிர்கள் வீணாகின
இதில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தன. இதுமட்டுமின்றி வயல்களில் மழைநீர் தேங்கியதால் சாய்ந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகின. சில இடங்களில் மழைநீரில் மூழ்கிக் கிடக்கும் நெற்கதிர்கள் மீண்டும் முளைக்கத் தொடங்கி உள்ளது. கடும் சிரமத்திற்கு மத்தியில் விவசாயம் செய்து நீரில்லா சூழ்நிலையிலும் இருக்கும் நீரை பயன்படுத்தி நெற்கதிர்களை விளைவித்து அறுவடைக்கு தயாரான நேரத்தில் அவை வீணாகிப் போனது விவசாயிகளை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி விவசாயம் செய்தும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதால் எவ்வாறு கடனை திரும்ப செலுத்தப் போகிறோம், எப்படி எங்கள் வாழ்க்கையை தொடரப் போகின்றோம் என்று தெரியாத மனநிலையில் விவசாயிகள் உள்ளனர். ஆகவே விவசாயிகளுக்கு அரசு உதவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story