வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கோர்ட்டு உத்தரவுபடி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடை திறந்த முதல் நாளிலே விருதுநகர் மாவட்டத்தில் மதுபாட்டில் கள் விற்பனையில் விறுவிறுப்பு இல்லை. இந்த நிலையில் குறைந்த அளவிலான குடிமகன்கள் மதுபாட்டில்கள் வாங்கிச்சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மொத்தம் உள்ள 31 கடைகளில் 27 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. திறக்கப்பட்டு 3-ம் நாளான நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடியது. அவ்வப்போது ஒவ்வொருவராக வந்து மதுபாட்டில்கள் வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் குடிமகன்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் டோக்கன் கொடுப்பவர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். தற்போது மக்களிடையே பணப்புழக்கம் அதிகம் இல்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
Related Tags :
Next Story