கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு


கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 20 May 2020 10:34 AM IST (Updated: 20 May 2020 10:34 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து முடிதிருத்தம் செய்ய மக்கள் காத்திருந்தனர்.

கரூர், 

கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து முடிதிருத்தம் செய்ய மக்கள் காத்திருந்தனர்.

சலூன் கடைகள் திறப்பு

கொரோனாவின் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சலூன் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கிராமப்புறங்களில் மட்டும் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சலூன் கடைகளை அதன் உரிமையாளர்கள் திறந்தனர். கடைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். மேலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கையில் கையுறையும், முக கவசமும் அணிந்து பணிபுரிந்தனர். முடிதிருத்துவதற்காக பலர் வரிசையில் கடை முன்பு காத்திருந்தனர். கிராமப்புறங்களில் கடைகள் பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் உள்ளதால் ஒருவருக்கு முடிதிருத்தும் வரை மற்றவர்கள் காத்திருந்தனர். ஒரு சில கடையில் ஒரே ஒரு சேர் மட்டும் இருந்ததை காணமுடிந்தது.

கோரிக்கை

இதில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் மட்டும் அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி முடிதிருத்தம் செய்யப்படுகிறது. இதே நடைமுறையை பின்பற்றி நகர்ப்புறங்களில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story