குடிபோதையில் தகராறு: வாலிபர் மண்வெட்டியால் வெட்டிக்கொலை; தந்தை கைது


குடிபோதையில் தகராறு:  வாலிபர் மண்வெட்டியால் வெட்டிக்கொலை; தந்தை கைது
x
தினத்தந்தி 20 May 2020 10:40 AM IST (Updated: 20 May 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை மண்வெட்டியால் வெட்டி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நத்தத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது 55) கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகனும் ஒரு மகளும் உண்டு. மூத்த மகன் பெருமாள் (30).

இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி விவாகரத்து ஆனது. இதையடுத்து இவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். திருமண ஆன ஒரே மாதத்தில் அவரும் கணவரை விட்டு பிரிந்து சென்றார். இந்த நிலையில் தனது தந்தையுடன் வீட்டில் வசித்து வந்த பெருமாள் குடிபோதையில் தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

தந்தை கைது

சம்பவத்தன்று இதேபோல் குடித்துவிட்டு குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என கேட்டு தந்தை பொன்பாண்டியிடம் பெருமாள் தகராறு செய்துள்ளார். தகராறு செய்ததுடன் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொன்பாண்டி அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து மகன் என்றும் பாராமல் தாக்கினார். மண்வெட்டி பெருமாள் தலையில் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவலின்பேரில் இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி பொன்பாண்டியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story