பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு போலீஸ் சூப்பிரண்டுகள் வழங்கினர்


பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு போலீஸ் சூப்பிரண்டுகள் வழங்கினர்
x
தினத்தந்தி 20 May 2020 12:20 PM IST (Updated: 20 May 2020 12:20 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசுகள் வழங்கினர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசுகள் வழங்கினர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அமல்ராஜ் உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலும், அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஊரடங்கு நேரத்தில் தங்களுடைய நேரத்தை எப்படி பயனுள்ள வழியில் செலவிடுகிறார்கள் என்பது சம்பந்தமாக பேச்சுப் போட்டி நேற்று வெப் கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டது.

போட்டிகள் ஜூனியர், சீனியர் ஆகிய 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பேச்சு போட்டியில் ஜூனியர் பிரிவில் அகஸ்தியா முதல் இடமும், 2-ம் இடம் கல்பனாவும், பாலாஜி 3-ம் இடமும், 4-ம் இடம் முகுந்தனும் பிடித்தனர். சீனியர் பிரிவில் வர்ஷா முதல் இடமும், 2-ம் இடம் துஷிகாவும், ஹரிகரன் 3-ம் இடமும், 4-ம் இடம் சகானாவும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 மற்றும் 4-வது பரிசாக ரூ.500-ம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வழங்கி பாராட்டினார்.

பாராட்டு

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நடந்த பேச்சு போட்டியில் ஜூனியர் பிரிவில் அனிதா முதல் இடமும், 2-ம் இடம் விஷ்ணுபிரியாவும், சமிக்‌ஷா 3-ம் இடமும், 4-ம் இடம் ஸ்ரீவர்த்தினி பிடித்தனர். சீனியர் பிரிவில் பத்மபிரியா முதல் இடமும், 2-ம் இடம் பவித்ராவும், விவேகாதேவி 3-ம் இடமும், 4-ம் இடம் பிருந்தாவும் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 மற்றும் 4-வது பரிசாக ரூ.500-ம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வழங்கி பாராட்டினர்.

இதில் சமிக்‌ஷா என்கிற பள்ளி மாணவி போலீஸ் சூப்பிரண்டுக்கு தான் வரைந்த கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

Next Story