கர்நாடகத்தில் 15 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


கர்நாடகத்தில் 15 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 4:30 AM IST (Updated: 21 May 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஜலஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 15 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி ஜலஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய ஜல்சக்திதுறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்துடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது எடியூரப்பா பேசியதாவது:-

“ஜல ஜீவன் மிஷன் திட்டத்தை மத்திய மாநில-அரசுகள் தலா 50 சதவீத நிதி பங்களிப்பில் செயல்படுத்துகின்றன. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு தனது பங்கான ரூ.1,150 கோடியை ஒதுக்கியுள்ளது. கர்நாடகத்தில் 15 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப கர்நாடக அரசு தீவிரமாக செயல் படும்.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

கஜேந்திரசிங் ஷெகாவத்

மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் பேசுகையில், “ஜலஜீவன் மிஷன் திட்டத்தை அமல்படுத்த நிதி பற்றாக்குறை இல்லை. கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் 15-வது நிதி கமிஷனின் நிதியை பயன்படுத்தி இந்த திட்டத்தை 2022-23-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்” என்றார்.

இந்த கூட்டத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா, நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Next Story