சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியவர்களுக்கு நோட்டீஸ் போலீசாருக்கு உள்துறை மந்திரி உத்தரவு


சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியவர்களுக்கு நோட்டீஸ் போலீசாருக்கு உள்துறை மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 21 May 2020 5:15 AM IST (Updated: 21 May 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசாருக்கு உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

கொரோனா வைரசை விட அதுகுறித்த வதந்திகள், சர்ச்சைக்குரிய கருத்துகள், வெறுப்புணர்வை பரப்பும் பதிவுகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில் ஊரடங்கின் போது வதந்திகளை பரப்பியது உள்பட மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் சுமார் 400 சைபர் குற்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

இந்தநிலையில் நேற்று உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஊரடங்கின் போது கண்டறியப்பட்ட 400 சைபர் குற்றசம்பவங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் 149-வது பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

போலீசாரால் கண்டறியப்பட்ட 400 சைபர் குற்றங்களில் 170 சர்ச்சைக்குரிய பதிவுகள், புகைப்படங்கள், மீம்ஸ், வீடியோக்களை பகிர்ந்தது தொடர்பானவை. 178 சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தது தொடர்பானவை ஆகும்.

இதுதவிர மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட சைபர் குற்றவழக்குகள் தொடர்பாக 213 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் 102 சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன

Next Story