மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது + "||" + Plus Two student arrested for farmer murder case

விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது

விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது
உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 33). விவசாயி. இவர் கடந்த 13-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நடந்து சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேர் கைது செய்தனர். 

இந்தநிலையில் விவசாயி கொலை வழக்கில் அனுமந்தபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மாணவரை நேற்று கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிக்கு கத்திக்குத்து; கல்லூரி மாணவர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் சந்திரன் (வயது 30).