பணம் வைத்து சூதாடியதாக 14 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பண்டப்பள்ளிகொத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த உமாசங்கர் (வயது 35), அர்ஜூனன் (33) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று பேரிகை போலீசார் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் சூதாடிய அதேபகுதியை சேர்ந்த பிரதீப் (24), சவுந்தர் (29), முனிகிருஷ்ணன் (45), ஹரிஸ் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் நகரசம்பட்டி போலீசார் வேலம்பட்டியில் உள்ள சந்தை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சூரியா (22), நேதாஜி (21), சுப்பிரமணி (41) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய ராஜப்பா (48), தேவராஜ் (47), மாரியப்பா (42), சீனிவாசன் (32), ஆனந்த் (45) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் சூதாடிய 14 பேரை போலீசார் கைது செய்தனர்
Related Tags :
Next Story