சீர்காழியில் 10,800 பேருக்கு நிவாரண உதவி பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்


சீர்காழியில் 10,800 பேருக்கு நிவாரண உதவி பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 21 May 2020 6:06 AM IST (Updated: 21 May 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீர்காழி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்த நிலையில் சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரதி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 800 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 

இதேபோல் நாடக கலைஞர்கள், இசை கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் உள்பட 10 ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் சீர்காழியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் வகையில் ரூ.1½ லட்சத்துக்கான காசோலையை நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினார்.

அப்போது நகராட்சி பொறியாளர் வசந்தன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயராஜமாணிக்கம், நற்குணன், சுந்தரராஜன், நகர செயலாளர் பக்கிரிசாமி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூர் செயலாளர் போகர்ரவி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் செல்லையன், சீர்காழி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.வி.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story