மாவட்ட செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில்3 பேர் மீது தாக்குதல் + "||" + In different cases Attack on 3 people

வெவ்வேறு சம்பவங்களில்3 பேர் மீது தாக்குதல்

வெவ்வேறு சம்பவங்களில்3 பேர் மீது தாக்குதல்
குத்தாலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாலையூர், 

குத்தாலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

3 பேர் மீது தாக்குதல்

நாகை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் நந்தகுமார், அருண்குமார். இவர்களுக்கும், குத்தாலம் பாரதி தெருவை சேர்ந்த ராஜாராமன் மகன் மணிபாரத் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த பச்சைப்பிள்ளை மகன் அருண்பிரசாத் (22), குத்தாலம் புதுசாலியத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சஞ்சய் (23), குத்தாலம் புதுநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கவுதம், அரையபுரத்தை சேர்ந்த விஜய், குத்தாலம் குண்டு பிளாக் தெருவை சேர்ந்த அசோக் ஆகிய 6 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக 6 பேரும் சேர்ந்து நந்தகுமார், அருண்குமார் ஆகிய 2 பேரையும் தகாத வார்த்தை களால் திட்டி தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் தேரழுந்தூர் கீழத்தெருவை சேர்ந்த சந்திரகாசன் மகன் விவேக் (20) என்பவர், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர், குத்தாலம் உத்திர மேலவீதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த சஞ்சய், அருண்பிரசாத், கவுதம், மணிபாரத் ஆகிய 4 பேரும் எங்களது ஏரியாவுக்கு ஏன் வந்தாய்? என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்து, பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர்.

3 பேர் கைது

இதில் பலத்த காயம் அடைந்த விவேக் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், புஷ்பலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குத்தாலம் ஓ.என்.ஜி.சி. பின்புறம் உள்ள காட்டு பகுதியில் பதுங்கியிருந்த அருண்பிரசாத், சஞ்சய், மணிபாரத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேற்கண்ட 2 வழக்குகள் தொடர்பாக தப்பி ஓடிய கவுதம், விஜய், அசோக் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.