பொம்மிடி, அரூர் பகுதிகளில் சோதனைச்சாவடிகளில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


பொம்மிடி, அரூர் பகுதிகளில் சோதனைச்சாவடிகளில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2020 1:29 AM GMT (Updated: 21 May 2020 1:29 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொம்மிடி,

 பொம்மிடி, கோம்பூர், அரூர், அனுமன்தீர்த்தம், நரிப்பள்ளி, திப்பம்பட்டி மற்றும் காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளை சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 

அப்போது சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசங்களை அணிந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார். 

சோதனைச்சாவடிகளில் சிறப்பான முறையில் பணியை மேற்கொண்ட போலீசாருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் போலீசாருக்கு கபசுர குடிநீர், ஊட்டச்சத்து பானம் மற்றும் பிஸ்கட்டுகளையும் வழங்கினார். 

இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பவுலோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story