மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட 8 பேருக்கு அரிவாள் வெட்டு 3 பேர் கைது + "||" + Scythe cut to 8 people 3 arrested

மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட 8 பேருக்கு அரிவாள் வெட்டு 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட 8 பேருக்கு அரிவாள் வெட்டு  3 பேர் கைது
பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட 8 பேரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டிவீரன்பட்டி, 

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 22). இவருக்கு சொந்தமான தோட்டம் அய்யம்பாளையம் மருதாநதி அணைப்பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்துக்கு ராமச்சந்திரன் தனது நண்பர்கள் சிலருடன் மோட்டார் சைக்கிள்களில் சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது அவர்கள், மருதாநதி அணை குடியிருப்பு பகுதி வழியாக மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த கோபி (40), பாண்டி (32) மற்றும் சிலர் தட்டிக் கேட்டுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மருதாநதி அணை குடியிருப்பு பகுதிக்கு வந்து அங்குள்ளவர்களிடம் தகராறு செய்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மருதாநதி அணை குடியிருப்பை சேர்ந்த கோபி (40), பாண்டி (32), போஸ் (60) உள்பட 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பாளையம் சூரியங்குளத்தை சேர்ந்த சதீஷ், ராம்குமார், நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அய்யம்பாளையம் மற்றும் மருதாநதி அணை குடியிருப்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.
2. காவேரிப்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நர்சு பலி
காவேரிப்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நர்சு பலியானார்.
3. தந்தை நினைவாக வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தந்தை நினைவாக வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. முத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
முத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
5. 2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம்: வீடியோ ‘வைரல்’ ஆனதால் பிடித்து அபராதம்
2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ ‘வைரல்’ ஆனதால், அவர்களை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.