“அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” அனைத்து டிரைவர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

“அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” அனைத்து டிரைவர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 May 2020 8:04 AM IST (Updated: 21 May 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், அனைத்து டிரைவர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நெல்லை, 

தமிழக அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், அனைத்து டிரைவர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனைத்து டிரைவர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர்அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தங்க பாண்டி முன்னிலை வகித்தார். பின்னர் டிரைவர் சங்க நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அனைத்து டிரைவர்கள் சங்கத்தில் சுமார் 22 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். நெல்லை கிளையில் சுமார் 1,650 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அரசின் நலத்திட்டங்கள்

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே எங்கள் சங்கத்தில் உள்ள டிரைவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story