மாவட்ட செய்திகள்

சூரியஒளி மூலம் மோட்டார் பம்புகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்கலெக்டர் ஷில்பா தகவல் + "||" + Subsidy to farmers for solar pumps Collector Shilpa Information

சூரியஒளி மூலம் மோட்டார் பம்புகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்கலெக்டர் ஷில்பா தகவல்

சூரியஒளி மூலம் மோட்டார் பம்புகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்கலெக்டர் ஷில்பா தகவல்
சூரியஒளி மூலம் மோட்டார் பம்புகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை, 

சூரியஒளி மூலம் மோட்டார் பம்புகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மோட்டார் பம்புகள்

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் வேளாண் பொறியியல் துறை மூலம் திறந்த வெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய ஒளியின் மூலம் இயங்கும் மோட்டார் பம்புகள் 70 சதவீத அரசு மானியத்துடன் 5 எச்.பி. முதல் 10 எச்.பி. வரை அமைத்து தரப்படுகிறது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நெல்லை, பாளையங்கோட்டை, மேலநீலிதநல்லூர், மானூர், சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை (செல்போன் எண் 9443172665) தொடர்பு கொள்ளலாம்.

தென்காசி- ஆலங்குளம்

தென்காசி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், செங்கோட்டை, கீழப்பாவூர், ஆலங்குளம் வட்டார விவசாயிகள் தென்காசி ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள வேளாண்மை பொறியாளர் துறையின் உதவி செயற்பொறியாளரை (7708692246) தொடர்பு கொள்ளலாம்.

சேரன்மாதேவி, அம்பை, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம், பாப்பாக்குடி, நாங்குநேரி, கடையம் வட்டார விவசாயிகள் சேரன்மாதேவி உதவி பொறியாளர் (9443194672), பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள செயற்பொறியாளரை (9486889991) தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை