விழுப்புரம் நகரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 50 கார்கள் பறிமுதல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விழுப்புரம்,
தற்போது 4-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் நகரில் இந்த ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் அத்தியாவசிய தேவையை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் சாலையில் வாகனங்களில் சுற்றுகிறார்களா? என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ஞானசேகரன், ராஜலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையை தவிர மற்ற தேவைகளுக்காக கார்கள் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட 50 கார்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அதன் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story