திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்
திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.
மாற்றம்
திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக துரை முருகன் இருந்து வந்தார். இவர் திடீர் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட டாஸ்மாக்கின் புதிய மேலாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பார்த்திபன் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் ஆக உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்து உள்ளார். பணி மாறுதல் செய்யப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மாற்று பணியிடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்பதால் அவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில் திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ஏராளமான அளவில் திருட்டு போனது. மேலும் சட்டவிரோதமாக விற்பனை நடந்ததாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாகவே மாவட்ட மேலாளர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story