வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 May 2020 10:35 AM IST (Updated: 21 May 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மஞ்சனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் மகன் ஆனந்தராஜ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் மாலை கிரிக்கெட் விளையாடிவிட்டு அந்த பகுதி சோனையா கோவில் வழியாக சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை  மேலச்சோத்தூரணியை சேர்ந்த ராஜதுரை மகன் மணிகண்டன் (22), எம்.ஜி.ஆர்.நகர் முருகன் மகன் மணிகண்டன் (24) ஆகியோர் வழிமறித்து தாக்கினார்களாம். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story