பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை 111 பேர் முடிவுக்காக காத்திருப்பு


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை 111 பேர் முடிவுக்காக காத்திருப்பு
x
தினத்தந்தி 21 May 2020 6:14 AM GMT (Updated: 21 May 2020 6:14 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத் தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரும், அரிய லூர் மாவட்டத்தில் மொத் தம் 355 பேரும் பாதிக்கப் பட்டிருந்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர்-அரிய லூர் மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை. மேலும் மாவட்டங்களில் மொத்தம் 111 பேரின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோத னைக்காக அனுப்பப் பட்டுள்ளதால், அவர் கள் முடிவுக்காக காத் திருக்கின்றனர்.

புதிதாக பாதிக்கப்படவில்லை

பெரம்பலூர் மாவட்டத் தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரும், அரிய லூர் மாவட்டத்தில் மொத் தம் 355 பேரும் பாதிக்கப் பட்டிருந்தனர். பாதிக்கப்பட் டவர்களில் பெரும்பாலா னோர் சென்னை கோயம் பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போலவே, நேற்றும் யாருக் கும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத் தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஏற்கனவே 113 பேர் குண மடைந்து வீடு திரும்பியிருந்த னர். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரில், நேற்று பிரசவித்த தாய் ஒருவர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும் பினார். முன்னதாக அவ ருக்கு சுகாதாரத் துறையினர், மருத்துவக் குழுவினர் பழங் கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதனால் பெரம் பலூர் மாவட்டத்தில் தற்போது 25 பேர் மட்டுமே மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

111 பேர்

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 76 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரி சோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 355 பேரில், 348 பேர் சிகிச்சை பெற்று குணமடைந் ததால் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரிய லூர் மாவட்டத்தில் 35 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப் பப்பட்டுள்ளது.பெரம்ப லூர்-அரியலூர் மாவட்டங் களில் மொத்தம் 111 பேரின் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

Next Story