ஜூன் 1-ந்தேதி முதல் பெங்களூரு-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட 14 ரெயில்கள் இயக்கம் தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு
ஜூன் 1-ந்தேதி முதல் பெங்களூரு-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட 14 ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா ஊரடங்கால் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் தினமும் 200 ரெயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து பெங்களூரு-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
* சி.எஸ்.டி.எம். மும்பை-கே.எஸ்.ஆர். பெங்களூரு (வண்டி எண்: 01301) எக்ஸ்பிரஸ் ரெயில் 1-ந்தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை தினமும் இயங்குகிறது. இந்த ரெயில் 1-ந்தேதி (திங்கட்கிழமை) மும்பையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு பெங்களூருவை வந்தடைகிறது.
* கே.எஸ்.ஆர். பெங்களூரு- சி.எஸ்.டி.எம். மும்பை (01302) எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 2-ந்தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை தினமும் இயங்குகிறது. இந்த ரெயில் 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.15 மணிக்கு மும்பையை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் தாதர், கல்யாண், லோனவாலா, புனே, உருளி, குருந்துவாடி, சோலாபூர், கலபுரகி, ஷகாபாத், வாடி, நால்வார், யாதகிரி, கிருஷ்ணா, ராய்ச்சூர், மந்த்ராலயம் ரோடு, அதோனி, குண்டக்கல், ஹூடி, அனந்தபூர், தர்மாவரம், ஹிந்துபூர், கவுரிபித்தனூர், தொட்டபள்ளாப்புரா, எலகங்கா, பெங்களூரு கண்டோன்மெண்ட் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* சி.எஸ்.டி.எம். மும்பை -கதக் (01139) எக்ஸ்பிரஸ் ரெயில் 1-ந்தேதி முதல் தினமும் இயங்குகிறது. இந்த ரெயில் 1-ந்தேதி இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.20 மணிக்கு கதக்கை வந்தடைகிறது.
* கதக்-சி.எஸ்.டி.எம். மும்பை (01140) எக்ஸ்பிரஸ் ரெயில் 2-ந்தேதி முதல் தினமும் இயங்குகிறது. இந்த ரெயில் 2-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.10 மணிக்கு மும்பையை சென்றடைகிறது. இந்த ரெயில் இருமார்க்கமாகவும். தாதர், தானே, லோனவாலா, புனே, குருந்துவாடி, சோலாப்பூர், விஜயாப்புரா, பாகல்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பெங்களூரு-தன்பூர்
* கே.எஸ்.ஆர்.பெங்களூரு-தன்பூர் (02295) எக்ஸ்பிரஸ் ரெயில் 1-ந்தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை தினமும் இயங்குகிறது. இந்த ரெயில், 1-ந்தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு 3-ந்தேதி காலை 9.05 மணிக்கு தன்பூரை சென்றடைகிறது.
* மறுமார்க்கமாக தன்பூர் -கே.எஸ்.ஆர்.பெங்களூரு (02296) எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந்தேதி முதல் இயங்குகிறது. இந்த ரெயில் 3-ந்தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 5-ந்தேதி இரவு 8.20 மணிக்கு பெங்களூருவை வந்தடைகிறது. இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், காட்பாடி, எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல், விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், அகலகாபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல, பெங்களூரு யஷ்வந்தபுரம்-சிவமொக்கா (02089/02090) ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், கே.எஸ்.ஆர்.பெங்களூரு-உப்பள்ளி (02079/02080) ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூரு யஷ்வந்தபுரம்-நிஜாமுதீன் (02629/02630) எக்ஸ் பிரஸ் ரெயில்கள் உள்பட 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயங்குகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story