ஆட்டோ டிரைவர்கள் ரூ.5,000 பெற வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் துணை முதல்-மந்திரியிடம் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தல்


ஆட்டோ டிரைவர்கள் ரூ.5,000 பெற வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் துணை முதல்-மந்திரியிடம் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 May 2020 3:15 AM IST (Updated: 22 May 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியை பெங்களூருவில் நேரில் சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மந்திரியுமான தினேஷ் குண்டுராவ் ஒரு கடிதம் வழங்கினார்.

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியை பெங்களூருவில் நேரில் சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மந்திரியுமான தினேஷ் குண்டுராவ் ஒரு கடிதம் வழங்கினார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கால் கஷ்டத்தில் உள்ள ஆட்டோ-வாடகை கார் டிரைவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணத்தை பெற மாநில அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆட்டோ-வாடகை கார் டிரைவர்கள் சங்க நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, அந்த நிவாரண தொகையை பெற அரசு விதித்துள்ள நிபந்தனை குறித்து தங்களின் பிரச்சினைகளை தெரிவித்தனர். அந்த நிவாரண தொகையை ஆட்டோ டிரைவர்கள் எளிதாக பெறும் வகையில் வழிமுறைகளை எளிமைபடுத்த வேண்டும். கடந்த 2 மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆட்டோ-வாடகை கார் டிரைவர்கள் கஷ்டத்தில் உள்ளனர். சில ஆட்டோ டிரைவர்களுக்கு சொந்தமாக ஆட்டோ இல்லை. ஆனால் அந்த டிரைவர்களிடம் ஓட்டுனர் உரிமம், டிரைவர் பேட்ச், தகுதி சான்றிழை வைத்துள்ளனர். இந்த ஆவணங்களை வைத்துள்ள டிரைவர்களின் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குகளை பரிசீலித்து நிவாரண உதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த மார்ச் 24-ந் தேதி வரை ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்களுக்கு இந்த பயன் கிடைக்கும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் ஊரடங்கால் பலர் தங்களின் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க முடியாமல் உள்ளனர். அதனால் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க முடியாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சரக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்களும் கஷ்டத்தில் உள்ளனர். அவர்களுக்கும் அந்த நிவாரணத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story