தஞ்சையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு எண்ணிக்கை 80 ஆக உயர்வு
தஞ்சையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில் 66 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சை மாவட்டத்துக்குள் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், அயல் நாடுகளிலிருந்து தஞ்சை மாவட்டத்துக்கு திரும்புபவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் 4 பேருக்கு பாதிப்பு
இவர்களில், சமீபத்தில் மும்பையிலிருந்து திரும்பிய பட்டுக்கோட்டை தாலுகா பாதரங்கோட்டை கிராமத்தை சேர்ந்த 48 வயது நபர், கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், மாலத்தீவிலிருந்து வந்த ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர், சென்னையிலிருந்து திரும்பிய திருவையாறு தாலுகா குழி மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. தற்போது 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story